, 10-Jan-2023 Skip to main content

Featured

முருகன் பாடல்|Murugan Bakthi Padal|Murugan Songs Lyrics

முருகன் பாடல்|Murugan Bakthi Padal|Murugan Songs Lyrics A flow of thoughts on Lord Murugan, this murugan bakthi padal, tries to capture the emotions that pass through the heart on hearing the name of Murugan. This Murugan song in Tamil tries to visualize the positive effect Murugan's name can make in one's life. Hope this murugan song lyrics make a difference in your life. மணி என்பது அவனோட பேரு சுப்பிரமணி என்பது அவனோட பேரு அவனை நினைத்தாலே மனதிலே பேரின்ப ஆறு மணி என்பது அவனோட பேரு அவனே என் சொக்கனுக்கப்பன், சுவாமி  மலையிலே பிரணவத்தை அறிந்தானே சொக்கன் கந்தா குஹா கார்த்திகேயா, என்று எப்பேரில்  விளித்தாலும் அவன் நிழல் அங்கிருக்கும் மணி என்பது அவனோட பேரு அவனை நினைத்தாலே மனதிலே பேரின்ப ஆறு இறுமாப்பு, அகங்காரம், கர்வம், எல்லாம்  அவன் பேரை கேட்டாலே ஓடிடும் தூரம் தினம் உன்னை நினைத்தேன் என் முருகா அடியன் மனதிலே எப்போதும் உன்னுருவே இருக்கும் மணி என்பது அவனோட பேரு அவனை நினைத்தாலே மனதிலே பேரின்ப ஆறு கஷ்டங்கள் பலவுண்டிப் பாரில், அவன் முன்னே  நம் கஷ்டங்க...

சுயநலமாய் இரு, நலமாய் இருப்பாய்!


சுயநலம்!

வணக்கம். நான் Alkrie.

முன்னே ஒரு முறை, நாட்டுப்பற்றை பற்றி பேசினோம். அதன் பின்னணியில், இரவு பன்னிரண்டு மணி ஆனாலும், traffic signalஐ மதித்து செல்கிறீர்கள் என்று நம்புகிறேன்.

ஆமா, ஊரே மதிக்கல, நான் மட்டும் மதிச்சு என்ன ஆகப்போகுதுன்னு தயவு செஞ்சு நினைக்காதீங்க. என் நாடு, என் மக்கள், என் சட்டம், நான் மதிக்கலேன்னா உலகத்துல நம்ம நாட்டை எவன் மதிப்பான்னு நினையுங்க.

சரி. இன்னைக்கு பேசப்போற topic இது தான்.  சுயநலம் நல்லதா இல்லையா?

நாம் எல்லோரும் சுயநலமாக இருப்பது நல்லது என்று இயற்கை நமக்கு கற்றுக் கொடுக்கிறது.

அதுக்கு முன்னாடி, சுயநலம்னா என்னன்னு தெரிஞ்சுக்க வேண்டியது அவசியம். அதுக்கு முக்கியமா, இந்த உலகம், இந்த பிரபஞ்சம் எப்படி இயங்குதுன்னு தெரிஞ்சுக்க வேண்டியது அவசியம்.

இந்த பிரபஞ்சம் என்கிறது, ஒரு system. யாரோ ஒருத்தர் இல்ல பல பேர் சேர்ந்து உருவாக்கின ஒரு perfect system. இதில என்னன்னா, நாம செய்யற ஒவ்வொரு செயலுக்கும் ஒரு எதிர்ச்செயல், எதிர்வினை நடக்கும். நாம செய்யற செயல் மற்றவர்களுக்கு உபயோகமானதாக இருந்தால் நமக்கு நல்லதாகவும், எதிர்மறையான செயலாக இருந்தால் எதிர்மறையான நிகழ்வுகளும் காலப்போக்கில் சம்பவிக்கும்.

Bankல காசு வாங்கினா வட்டி குடுக்கணும். அதே Bankல காசு போட்டா நமக்கு வட்டி குடுப்பாங்க. செடிக்கு தண்ணி ஊத்தினா மரமா வளரும். அதே செடிக்கு வெந்நீர் ஊத்தினா... 

படிக்கற காலத்துல நல்லா படிச்சா கிளாஸ்ல first; நல்ல வேலையில உக்காரலாம். வெட்டியா class கட்டடிச்சு சினிமா பாத்தா... பரீட்சைல கோட்டு வாழ்க்கையிலையும் கோட்டு தானே.

இயற்கையில நீர் ஒரு இடத்துல ஆவியாகி வேறு ஒரு இடத்துல மழையாய் பொழிகிறது. இது எல்லாம் ஒரு சுழற்சி, இயற்கைங்கற ஒரு system. இயற்கையில் நடக்கும் ஒவ்வொரு விஷயமும் நமக்கு நாம் எப்படி வாழ வேண்டும் என்று சொல்லி தந்து கொண்டே இருக்கிறது.

இந்த மாதிரி உதாரணங்கள் நம் வாழ்க்கையில தினமும் பாக்கலாம். 

அதனால, இப்போ உலகத்துல "நாம நினைச்சிட்டிருக்குற மாதிரி" சுயநலமா நடந்துக்கிட்டா அது நம்மை நாமே ஏமாத்திக்கற மாதிரி. இந்த system அப்படிங்கறது நாம எல்லாரையும் உள்ளடக்கினது. நாம செய்யற ஒவ்வொரு செயலும், மத்தவங்களையும், அதே சமயத்துல நம்மையும் பாதிக்கும்.

சுருக்கமா சொல்றேன். இந்த ஒரு விஷயத்தை முக்கியமா நாம புரிஞ்சுக்கணும்.

இந்த உலகத்துல நாம வாழும் வாழ்க்கை ஒரு IPL match போலத்தான். ஒவ்வொரு மேட்ச் முடிஞ்சப்புறம் இன்னொரு மேட்ச் இருக்கும். ஒவ்வொரு சீசன் முடிஞ்சப்புறம் இன்னொரு சீசன் இருக்கும்.

So, அதுபோல நாமளும் திரும்பவும் match விளையாட வருவோம். அப்போ, நாம போன matchல விளையாடுன ஆட்டத்தோட புள்ளி விவரம் (statistics) கூடவே வரும்.

நம்மளோட அடுத்த மேட்ச் நல்லா இருக்கணும்னா நம்மோட  இந்த  மேட்ச் stats நல்லா இருக்கணும்.

நாம் செய்யும்  கொலை, கொள்ளை, மற்ற எதிர்மறை செயல்களும் இந்த புள்ளி விவரத்தில் உட்கொள்ளப்படும். செய்யும் ஒவ்வொரு வினைக்கும் பயன் உண்டு. நல்ல வினைக்கு நற்பலன், தீவினைக்கு தீய பலன். இந்த systemல நான் இந்த மதத்தை சேர்ந்தவன், அதனால் வேறு மதத்தை சேர்ந்தவனை கொன்றதனால் தண்டனை இல்லை. மாறாக, பரிசு கிடைக்கும் என்று தப்பிக்க முடியாது. கொடிய செயல்களுக்கு நிச்சயம் தண்டனை உண்டு. இயற்கைக்கு ஒரே நீதி தான்.

இந்த இரகசியத்தை அறிந்ததால் தான் நம் முன்னோர்கள் நல்லதை செய்யு, நல்லவனா இருன்னெல்லாம் சொன்னாங்க. ஏன்னா அவங்களுக்கு தெரியும் நம்ம வாழ்க்கை இப்போ நாம வாழ்ந்திட்டிருக்கற ஒரு மேட்சோட நிற்க போறதில்லன்னு.

இன்னொரு முக்கியமான விஷயம். இந்த systemல கடவுள் நேரடியா pictureலயே வர்றதில்லிங்க. கடவுள் இருக்காரா இல்லையாங்கறதே சர்ச்சைக்குரிய விஷயமா இருக்கறதுனால, அதை பிறகு பார்ப்போம்.

நாம இறந்த மறு வினாடி நாம சம்பாதிச்ச அத்தனையும் போயே போச்சு. ஊரை ஏமாத்தி இத்தனை சம்பாதிச்சு என்ன பலன்?

ஒரே ஒரு வாக்கியத்தில் சொல்ல வேண்டுமென்றால், நம் எந்த செயல்களெல்லாம் மற்றவர்களுக்கு இடைஞ்சலாய் இருக்கிறதோ, மற்றவர் மனத்தை புண்படுத்துகிறதோ, அதெல்லாம் எதிர்மறை செயல்கள். அவற்றை செய்வதை தவிர்ப்போம்.

உலகின் பல ஞானிகளும் இதை தான் சொல்லி வந்திருக்கிறார்கள். அதை நாம் சரியாக புரிந்துகொள்ளவில்லை என்பது தான் உண்மை. 

An eye for an eye will leave everyone blind என்று Gandhi அவர்கள் சொன்னதாய் கேள்விபட்டிருக்கிறோம்.

Father, forgive them, for they do not know what they are doing. இது Bibleஇல்  ஏசு சொன்னதாய் காண்கிறோம்.  முன்வினைப் பயன் உண்டு என்று ஏசு நன்றாய் அறிகிறார்.

குர்ஆனில் எங்ஙனம் சொல்லப்பட்டிருக்கிறது பாருங்கள். When someone does something that hurts you, make a promise to yourself and to Allah that you will never do the same thing to anyone else.

அதே போல், திருமூலர், அருணகிரிநாதர், பட்டினத்தார் போன்ற முனிவர்களும், சித்தர்களும் "சும்மா இரு"வென்ற பரமரகசியத்தை சொல்லி தந்திருக்கிறார்கள். நமக்கு சம்பவிப்பதெல்லாம் நாம் செய்த வினையின்  பலனே. அதற்கு மறு வினை செய்யாதிருந்து, நல்ல பல செய்கைகளினால் நமது அடுத்த ஆட்டத்தை மிகைப்படுத்டுவோம் என்பதே அறிவு.

அதனால், சுயநலமாய் இருக்க கற்று கொள்வோம். சுயநலமாய் இருக்க நம் குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுப்போம்.

Comments

Popular Posts