, 10-Jan-2023 Skip to main content

Featured

முருகன் பாடல்|Murugan Bakthi Padal|Murugan Songs Lyrics

முருகன் பாடல்|Murugan Bakthi Padal|Murugan Songs Lyrics A flow of thoughts on Lord Murugan, this murugan bakthi padal, tries to capture the emotions that pass through the heart on hearing the name of Murugan. This Murugan song in Tamil tries to visualize the positive effect Murugan's name can make in one's life. Hope this murugan song lyrics make a difference in your life. மணி என்பது அவனோட பேரு சுப்பிரமணி என்பது அவனோட பேரு அவனை நினைத்தாலே மனதிலே பேரின்ப ஆறு மணி என்பது அவனோட பேரு அவனே என் சொக்கனுக்கப்பன், சுவாமி  மலையிலே பிரணவத்தை அறிந்தானே சொக்கன் கந்தா குஹா கார்த்திகேயா, என்று எப்பேரில்  விளித்தாலும் அவன் நிழல் அங்கிருக்கும் மணி என்பது அவனோட பேரு அவனை நினைத்தாலே மனதிலே பேரின்ப ஆறு இறுமாப்பு, அகங்காரம், கர்வம், எல்லாம்  அவன் பேரை கேட்டாலே ஓடிடும் தூரம் தினம் உன்னை நினைத்தேன் என் முருகா அடியன் மனதிலே எப்போதும் உன்னுருவே இருக்கும் மணி என்பது அவனோட பேரு அவனை நினைத்தாலே மனதிலே பேரின்ப ஆறு கஷ்டங்கள் பலவுண்டிப் பாரில், அவன் முன்னே  நம் கஷ்டங்கள் பொடியாகி

உபநிஷதுகளில் உள்ள பொய்யான அறிவியல்


கொஞ்ச நாள் முன் ஒரு புத்தகம் படிச்சேன். "Selections from the Upanishads", இது தான் அந்த புத்தகத்தோட பெயர். இதற்கு முகவுரை எழுதியவர் ஒரு "J Murdoch". ஒவ்வொரு இந்துவும் உபநிஷதுக்களை படித்தறிய வேண்டும் என்று அவர் அபிப்ராயப்படுகிறார்.

அதில் ஒரு அத்தியாயம் "False science in the Upanishads". அதில், உபநிஷதுகளில் உள்ள பொய்களை(?!) படம் பிடித்து காட்டியிருந்தனர். அந்த பொய்களில் ஒன்றை இங்கே தருகிறேன். 

பக்கம் 90ல் இது பகிரப்பட்டுள்ளது. தலைப்பு, "நமது உடலைப் பற்றிய தவறான கணக்கு".

கதா, சாந்தோக்ய  உபநிஷதுகள், இவ்வாறு கூறுகின்றன.

"16. இதயத்தில் 101 நாடிகள் இருக்கின்றன; அதில் சுஷும்னா நாடி தலை பாகத்திற்கு போகிறது. இந்த நாடி மூலம் உயிர் பிரியும் ஒருவர் மரணத்தை வெல்கிறார்."

இதயத்தை திறந்து பார்க்கும்பொழுது இதில் சொல்லியிருப்பதெல்லாம் கற்பனை என்பது தெளிவாகிறது. 

ஒரு பெரிய நாடி (தமனி) இரண்டாக பிரிந்து அசுத்த இரத்தத்தை நுரையீரலுக்கும், ஒரு மகா நாடி துணை பிரிவுகளாக உடல் முழுதுக்கும் சுத்தமான இரத்தத்தை கொண்டு சேர்க்கிறது. அது போன்றே, இரு மகா நாடிகள் அசுத்த இரத்தத்தை இதயத்துக்கும், நான்கு நாடிகள் நுரையீரலிலிருந்து இதயத்துக்கும் சுத்தமான இரத்தத்தை கொண்டு செல்கிறது.

பிரஸ்ன உபநிஷதுவில் ஒரு கூற்று, நாடிகளில் காற்று சுற்றிக்கொண்டிருக்கிறது என்று சொல்கிறது. 

[அவர்கள் (புத்தகத்தை எழுதியவர்கள்) சொல்வது:
(நமக்கு தெரிந்தது) ஒருவர் உயிரோடிருக்கும் பொழுது, நாடிகளில் இரத்தம் ஒழுகிக்கொண்டிருக்கிறது. ஒரு நாடி வெட்டுப்படும்போழுது இரத்தம் பீறிட்டு வருகின்றது.  ஒருவர் இறக்கும்பொழுது, இதயம் இரத்தத்தை வெளியே அனுப்பும் சக்தியை இழப்பதனால், நாடிகள் வெறுமையாகின்றன.

அதனால் உடலை படைத்த இறைவன் உபநிஷதுகள் இயற்ற ஊக்கமாய் இருந்திருக்க மாட்டான் என்று தெளிவாகிறது. ஏனென்றால் இறைவன் உடலை பற்றின தவறான கருத்தை கொடுக்க மாட்டார்.]

72000 கிளை நாடிகள் என்று சொல்லும்பொழுது எங்கே அந்த நாடிகள், பார்க்க முடியவில்லையே; ஆதலால், நீ சொல்வது உண்மையில்லை என்பது அவர்கள் கருத்து.

இக் கருத்திலிருந்து, ஸ்தூல சரீரம், சூட்சும சரீரம் என்று இருவேறு இயக்கங்கள் இருக்கலாம் என்பது போன்ற எண்ணமே அவர்களுக்கு இல்லை என்பதும் புலனாகின்றது.
 

Comments

Popular Posts